/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொழிலாளி வெட்டிக்கொலை தலைமறைவான வாலிபர் கைது
/
தொழிலாளி வெட்டிக்கொலை தலைமறைவான வாலிபர் கைது
ADDED : மே 22, 2025 02:10 AM

துாத்துக்குடி:முன்விரோதம் காரணமாக, தொழிலாளியை வெட்டிக் கொலை செய்து, தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால், 40. கல்கண்டு தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலைபார்த்தார். இவருக்கும், கந்தபுரத்தை சேர்ந்த சிவபெருமாள் என்பவருக்கும், சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ஜெயபால், கந்தபுரத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த, சிவபெருமாளின் தம்பி மோகன், 32, ஜெயபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குடிபோதையில் இருந்த அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயபாலை வெட்டிவிட்டு தப்பியோடினார். சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார்.
மெஞ்ஞானபுரம் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயபாலுக்கு மனைவியும், 11 வயதில் மகள், 8 வயதில் மகனும் உள்ளனர்.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த மோகனை, போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.