
துாத்துக்குடி: துாத்துக்குடி, தாளமுத்துநகரை சேர்ந்த பிரகாஷ், 24, என்பவரும், கிருஷ் ணராஜபுரத்தை சேர்ந்த கார்த்திக், 21, என்பவரும் இருகோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் கார்த்திக் தரப்பை சேர்ந்த சிலரை பிரகாஷ் தாக்கியுள்ளார்.
பிரகாஷ் தரப்பினரை தாக்கும் முயற்சியில் கார்த்திக் தரப்பினர் ஈடுபட்டனர். தாளமுத்துநகரில் உள்ள பிரகாஷ் வீட்டிற்கு கத்தி, அரிவாளுடன் சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளது.
மேலும், கிருஷ்ணராஜபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகராஜ், 18, அவரது நண்பர் முகில், 19, ஆகியோரை மர்ம கும்பல் திடீரென தாக்கியது.
முகில் தப்பியோடிய நிலையில், நாகராஜை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. நாகராஜ் உயிரிழந்தார்.
துாத்துக்குடி வடபாகம் போலீசார், சுந்தரவேல்புரத்தை சேர்ந்த கார்த்திக், 21, ஹரிகரன், 23, மற்றும் 17 வயது நான்கு சிறார்களை நேற்று கைது செய்தனர்.