/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தி.மு.க., பிரமுகர் கணவரிடம் ரூ.9.60 லட்சம் பறிமுதல்
/
தி.மு.க., பிரமுகர் கணவரிடம் ரூ.9.60 லட்சம் பறிமுதல்
தி.மு.க., பிரமுகர் கணவரிடம் ரூ.9.60 லட்சம் பறிமுதல்
தி.மு.க., பிரமுகர் கணவரிடம் ரூ.9.60 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 16, 2024 10:32 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தி.மு.க., பிரமுகர் கணவரிடம், 9.60 லட்சம்ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், திருப்பத்துார் - திருவண்ணாமலை சாலையில், விஷமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பத்துார் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணமின்றி, 9.60 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்தது. காரில் வந்தவர், ஜோலார்பேட்டை தி.மு.க., ஒன்றிய செயலர் கவிதா என்பவரின் கணவர் தண்டபாணி என்பது தெரிந்தது. இதையடுத்து, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.