/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கள்ளக்காதல் விவகாரம் டிரைவர் அடித்து கொலை
/
கள்ளக்காதல் விவகாரம் டிரைவர் அடித்து கொலை
ADDED : மே 14, 2024 07:42 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த குண்டுரெட்டியூரை சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன், 35. இவருக்கும், காளிதாஸ் மனைவி ரேவதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த காளிதாஸ், சரவணனை பல முறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கட்டட மேஸ்திரியாக பணிக்கு சென்ற காளிதாஸ், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் சரவணன், ரேவதி இருவரும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, சரவணனை சரமாரியாக, சமையல் ஜல்லி கரண்டி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கினார்.
படுகாயமடைந்த சரவணனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். குரிசிலாப்பட்டு போலீசார், காளிதாசை கைது செய்தனர்.

