/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி
/
துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி
துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி
துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டிய காவலர்: ரோடு டிவைடரில் மோதி பலி
ADDED : பிப் 15, 2025 05:44 AM
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, துாக்க கலக்கத்தில் பைக் ஓட்டி சென்ற காவலர், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள, இரும்பு தடுப்பு மீது மோதி பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், புதுார்நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 42. இவர், நாட்றம்பள்ளியில் தங்கி, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் பணி முடிந்து, ேஹாண்டா பைக்கில் வீடு திரும்பினார். அப்போது, சென்னை - பெங்களூரு சாலையில் வாணியம்பாடி புதுார் பகுதி அருகே சென்றபோது, துாக்க கலக்கத்தில் சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பி மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.