/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஹெச்.எம்., ஆசிரியர் இடமாற்றம்
/
பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஹெச்.எம்., ஆசிரியர் இடமாற்றம்
பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஹெச்.எம்., ஆசிரியர் இடமாற்றம்
பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஹெச்.எம்., ஆசிரியர் இடமாற்றம்
ADDED : ஏப் 26, 2025 03:11 AM
ஆம்பூர்:ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை, ஆசிரியரை இடமாற்றம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,  இடைநிலை ஆசிரியராக சுதாகர், 42, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சொர்ணமுகி, 38, தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சுதாகர் - சொர்ணமுகி ஆகியோரின் திருமண நாளை கடந்த, இரு நாட்களுக்கு முன், பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடினர்.
பள்ளி தலைமை ஆசிரியை சரோஜினி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து ஆசிரியர் சுதாகர் தனது முகநுாலில் பதிவிட்டிருந்தார்.
மேலும் நிகழ்ச்சியின் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியை சரோஜினியை வெங்கிளி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், சுதாகரை உதயேந்திரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார்.

