/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நண்பருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களை கொன்றவர் கைது
/
நண்பருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களை கொன்றவர் கைது
நண்பருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களை கொன்றவர் கைது
நண்பருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களை கொன்றவர் கைது
ADDED : செப் 21, 2024 12:38 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம் மாதனுார் அடுத்த வடிவேல் நகரைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி யோகராஜ், 35, இவரது மனைவி வினிதா, 30.
இவர்களது மகன்கள் யோகித், 5, அஞ்சல தர்ஷன், 4. யோகராஜின் நண்பர் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 30, இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கான்ட்ராக்டராக உள்ளார்.
பணம், கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக யோகராஜ் மற்றும் வசந்தகுமார் இடையே தகராறு இருந்தது.
ஆத்திரமடைந்த வசந்தகுமார், நேற்று முன்தினம் மாலை, யோகராஜ் வீட்டிற்கு சென்று தனியாக இருந்த யோகராஜின் மகன்கள் யோகித், அஞ்சல தர்ஷனை சிங்கில்பாடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றார்.
அங்கு இருவரையும், துடிக்க துடிக்க அடித்து கொலை செய்தார். மகன்களை காணாததால், யோகராஜ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை யில், சிறுவர்களை வசந்தகுமார் அழைத்து சென்றது தெரிந்தது.
வசந்தகுமார் மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில், சிங்கில்பாடி சிங்கத்தம்மன் கோவில் பகுதியில் சிக்னல் காட்டியது.
சிங்கில்பாடி ஏரிக்கரைக்கு சென்று பார்த்தனர். அங்கு வசந்தகுமார், இரண்டு சிறுவர்களின் உடல்களுடன் அமர்ந்திருப்பதை கண்டனர். பொதுமக்களை கண்டதும் வசந்தகுமார் அங்கிருந்து தப்பினார்.
தப்பி ஒடிய வசந்தகுமார், அவரது பாட்டி வீட்டில் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.