/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நாட்றம்பள்ளியில் தொழிற்பேட்டை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
/
நாட்றம்பள்ளியில் தொழிற்பேட்டை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
நாட்றம்பள்ளியில் தொழிற்பேட்டை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
நாட்றம்பள்ளியில் தொழிற்பேட்டை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 08:30 PM
திருப்பத்துார் : நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டாவில், தொழிற்பேட்டை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதி அருகே, கோயான் கொள்ளை வட்டம், புள்ளநேரி வட்டம், முத்துரான் வட்டம், வேலமரத்து வட்டம், நாடார் வட்டம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, தொழிற்பேட்டை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, நாட்றம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முல்லை தலைமை வகித்தார். அப்போது, விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை கொண்டு வரக்கூடாது. மற்றாக. ஏற்கனவே, ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தொழிற்பேட்டை பகுதியிலேயே விரிவு படுத்த வேண்டும். அவ்வாறு கொண்டு வரப்படும் தொழிற்பேட்டை சுற்றுப்புற சூழலை பாதிக்கக்கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்குமாறு கொண்டு வந்தால், அதற்கு அனுமதிக்க மாட்டோம் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மல்ல குண்டா ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்பட்டது.