/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நாட்டாண்மைக்கு அடி, உதை கண்டித்து ஊர் மக்கள் மறியல்
/
நாட்டாண்மைக்கு அடி, உதை கண்டித்து ஊர் மக்கள் மறியல்
நாட்டாண்மைக்கு அடி, உதை கண்டித்து ஊர் மக்கள் மறியல்
நாட்டாண்மைக்கு அடி, உதை கண்டித்து ஊர் மக்கள் மறியல்
ADDED : அக் 08, 2025 03:20 AM
ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் நாட்டாண்மை மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டில், அக்., 4-ம் தேதி பெருமாள் கோவில் திருவிழா நடந்தது. அன்றிரவு நடக்கவிருந்த நடன நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஊர் மக்களுக்கும், வெளியூர் ஆட்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஊர் நாட்டாண்மை சத்தியசீலன், 45, அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது, ஐந்து பேர் ஊர் நாட்டாண்மையை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் அடித்தனர்.
இதில், படுகாயமடைந்த சத்தியசீலன், ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, தசரதன், லட்சாதிபதி, இருசன், ரீனா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.
இளங்கோ புகார் படி, 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்தனர்.
ஊர் நாட்டாண்மையை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நேற்று காலை, 8:00 மணியளவில் மக்கள், ஜோலார்பேட்டை- - புத்துக்கோவில் சாலையில் காவேரிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், ஜோலார்பேட்டை போலீசார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட செய்தனர்.