/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
150 அடி உயர டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி
/
150 அடி உயர டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி
ADDED : மார் 18, 2025 01:04 AM
திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே தந்தை சொத்து தராததால், 150 அடி உயர டவர் மீது ஏறி மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடியை சேர்ந்தவர் திருப்பதி, 56. இவருக்கு இரு மனைவியர்.
முதல் மனைவி அஞ்சலியின் மகன் திருநாவுக்கரசு, 23. இவர், தன் தந்தையிடம், சொத்தை விற்று பணம் தரும்படி பலமுறை கேட்டு வந்தார்.
திருப்பதி சொத்தை விற்க முடியாது என கூறியதால், ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, ஏரிக்கோடி பகுதியிலுள்ள, 150 அடி உயர மொபைல் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
நாட்றம்பள்ளி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி அவரை பத்திரமாக மீட்டனர். நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.