ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
UPDATED : அக் 19, 2026 07:19 PM
ADDED : அக் 19, 2026 06:17 PM
திருப்பத்துார்: ஜவ்வாதுமலையில் பலத்த மழை பெய்து வருவதால், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கடந்த சில மாதங்களாக அதிகரித்திருந்த வெப்பத்தை தணிக்க, திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதிக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியர் ஏராளமானோர் வருகை தந்தனர். இதில், வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில், அதிகளவு வருகை தந்து ஜவ்வாதுமலையின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
தற்போது கடந்த, 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வனப்பகுதி ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலா பயணியர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். அவர்களிடம் வனத்துறையினர், எச்சரிக்கையாக குளிக்கும் படி அறிவுறுத்தினர்.
