ADDED : ஆக 18, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூர் பெரிய தோட்டம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் புஷ்பா நகர் தவ்ஹீத் பள்ளி வாசலில் இம்முகாம் நடந்தது.
மாவட்ட மாணவர் அணி நிர்வாகி அன்சர் தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் அப்பாஸ், ஷாஜகான், அஸரார், அராபத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் 60 யூனிட் ரத்த தானமாகப் பெறப்பட்டது.

