/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 சதவீத ஓட்டுப்பதிவு மாணவியர் விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டுப்பதிவு மாணவியர் விழிப்புணர்வு
ADDED : மார் 21, 2024 11:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தேர்தல் நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அவ்வகையில், திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், நேற்று, தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
'நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு' என்கிற விழிப்புணர்வு பேனர் ஏந்தியவாறு, திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

