/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு; தயார் நிலையில் ஏற்பாடுகள்
/
10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு; தயார் நிலையில் ஏற்பாடுகள்
10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு; தயார் நிலையில் ஏற்பாடுகள்
10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு; தயார் நிலையில் ஏற்பாடுகள்
ADDED : பிப் 22, 2025 07:06 AM
திருப்பூர்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல், 15 வரை நடக்கிறது. முன்னதாக, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு வரும் 24ல் துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து, தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
செய்முறைத் தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும். தேர்வுகள் துறை இணையதளத்தில் (http://www.dge.tn.gov.in) வெற்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்த தலைமை ஆசிரியர்கள், அதில், மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து, மார்ச் 4க்குள் மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட தேர்வுத்துறை, அனைத்து விபரங்களையும் தொகுத்து, மார்ச் 15க்குள் தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை குழுவினர் முறைகேடுகள் எதுவுமில்லாமல் செய்முறை தேர்வு நடப்பதை உறுதி செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த, 17ல் துவங்கிய பிளஸ் 1 செய்முறைத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.

