/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேலம் செல்லும் 17 சிலை; அவிநாசியில் வடிவமைப்பு
/
சேலம் செல்லும் 17 சிலை; அவிநாசியில் வடிவமைப்பு
ADDED : மே 04, 2024 12:19 AM

அவிநாசி:அவிநாசியில் வடிவமைக்கப்பட்ட சிலைகள், சேலம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சேலம் மாவட்டம், சேலத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூரணகலா ஸ்ரீ புஷ்பகலா சமேதர ஸ்ரீ அய்யனாரப்பன், ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவில் உள்ளது.
இதில், பிரதிஷ்டை செய்ய, அவிநாசியிலுள்ள கங்கோத்ரி சிற்பக்கூடத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
சிற்பி திருப்பதி கூறுகையில், ''ஐந்தரை அடி உயரத்தில் அய்யனாரப்பன் மற்றும் கருப்பராயன் சிலைகள், 5 அடி உயரத்தில் பாலமுருகன் சிலை, நாளே முக்கால் அடியில் பாப்பாத்தி அம்மன் சிலை, மூன்றரை அடி உயரத்தில் பூரணகலா, புஷ்பகலா சிலைகள், விநாயகர், முனியப்பன், கன்னிமார் சிலைகள் பலி பீடங்கள் என, 17 சிலைகளை, கடந்த ஆறு மாதமாக வடிவமைத்ததோம்,'' என்றார்.