ADDED : மே 12, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூரில், வலி மாத்திரையை போதைக்கு பயன்படுத்திய, இருவரை கைது செய்து, நுாறு மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா புழக்கம், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்பனை செய்வது உள்ளிட்டவற்றை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர், சூசையாபுரம் ரேஷன் கடை அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, இருவரை ரோந்து போலீசார் விசாரித்தனர். பல்லடத்தை சேர்ந்த ஹரிசங்கர், 23, ஜெரோவா சாமுவேல், 23 என்பதும், வலி மாத்திரையை போதை பயன்பாட்டிற்காக விற்பனை செய்வதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.