/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தை
/
அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தை
ADDED : மே 11, 2024 12:08 AM

திருப்பூர்;திருப்பூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு, திருப்பூர் அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.
திருப்பூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரின் மனைவி கவுசல்யா, கர்ப்பிணி என்ற நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம், அவருக்கு, ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண், ஒரு பெண் என, மூன்று குழந்தைகள் பிறந்தன.
அவருக்கு முறையே 1.50 கிலோ, 1.45 கிலோ, 1.55 கிலோ எடையுடன் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் நலத்துறை மருத்துவ பேராசிரியர் டாக்டர் உமாசங்கர் தலைமையிலான பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை வழங்கினர்.
டாக்டர்கள் கூறுகையில், 'குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்ததால், அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவிக்கப்பட்டன. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். குழந்தைகள் மூவரும் உடல் எடை கூடி, தேறிய நிலையில், 25 நாள் சிகிச்சைக்கு பின், பெற்றோருடன் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,' என்றார்.
சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கிய மருத்துவக்குழுவினரை, மருத்துவமனை டீன் முருகேசன் பாராட்டினார்.