ADDED : ஏப் 28, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;-லகு உத்யோக் பாரதி நிறுவன தினம் மற்றும் மகான் ஸ்ரீ சூர்தாசர் ஜெயந்தியை முன்னிட்டு, முயற்சி மக்கள் அமைப்புடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமில் திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அபிநயா, தலைமையில் மருத்துவ குழுவினர் 37 யூனிட் ரத்தம் சேகரித்தனர். ரத்த கொடையாளர் அனைவருக்கும்ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
லகு உத்தியோக் பாரதி அமைப்பின் நிர்வாகிகள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், அழகேந்திரா ஸ்போர்ட்ஸ் ஜெகதீஷ்குமார், முயற்சி மக்கள் அமைப்பின் துணைத் தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் விஜயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

