/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
/
வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
ADDED : ஆக 25, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,37; கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி. தம்பதியருக்கு நித்ரன், சாரதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு, 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் 2 வயது குழந்தை நித்திரன் தவறி விழந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

