/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அவசியம்
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அவசியம்
ADDED : ஜூலை 02, 2024 02:30 AM
உடுமலை;உடுமலை - கொழுமம் ரோடு ரயில்வே கேட்டில், வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில், தற்போது கூடுதல் ரயில்வழித்தடம் அமைப்பதால், மேலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
உடுமலையில், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, கொமரலிங்கம், கொழுமம், பழநி செல்லும் ரோட்டில், அபரிமிதமான போக்குவரத்து உள்ளது. இந்த ரோட்டிலுள்ள, ரயில்வே கேட் மூடப்பட்டால், பல கி.மீ., துாரத்திற்கு இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்நிலையில், திண்டுக்கல் - -பாலக்காடு அகல ரயில்பாதையில், தற்போது கூடுதலாக ஒரு வழிப்பாதை அமைக்கும் பணி ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கூடுதல் ரயில்கள் இயக்கம் மற்றும் இரு ரயில்வே வழித்தடத்திலும் காத்திருக்கும் ரயில்கள் என, மேலும் பல மணி நேரம் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.