/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடுரோட்டில் தோண்டப்பட்ட குழி பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
/
நடுரோட்டில் தோண்டப்பட்ட குழி பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
நடுரோட்டில் தோண்டப்பட்ட குழி பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
நடுரோட்டில் தோண்டப்பட்ட குழி பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
ADDED : மார் 02, 2025 04:46 AM

பல்லடம்: பல்லடத்தில், நடுரோட்டில் தோண்டப்பட்ட குழி, குடியிருப்பினரின் கடும் எதிர்ப்பால், உடனடியாக மூடப்பட்டது.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, மகாலட்சுமி அவென்யூ மற்றும் ஆண்டாள் நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயிலில், தொழிலாளர்கள் சிலர், நடுரோட்டில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேகமடைந்த இப்பகுதி பொதுமக்கள், 'எதற்காக குழி எடுக்கிறீர்கள்' என, தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பியதுடன், குழி தோண்டும் பணியை நிறுத்துமாறு கூறினர். பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, தோண்டப்பட்ட குழி மீண்டும் மூடப்பட்டது. இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அப்பகுதியினர் கூறியதாவது:
குடியிருப்பு நிறைந்த இப்பகுதியில், திடீரென, நடுரோட்டில் குழி தோண்டப்பட்டு வந்தது. விசாரித்தபோது, அருகிலுள்ள நீரோடையில் இருந்து கழிவுநீர் கொண்டு செல்ல குழாய் அமைப்பதாக தெரிய வந்தது.
இது குறித்து எந்தவித தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. முன்னறிவிப்பின்றி நடுரோட்டில் குழிதோண்டுவதால், விபத்து அபாயம் உள்ளது.
ஓடை வழியாகவே கழிவு நீரை கொண்டு செல்ல வழி இருக்கும் போது, நன்றாக உள்ள ரோட்டை தோண்டி, எதற்காக, குடியிருப்பு வழியாக குழாய் கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியவில்லை. நகராட்சி பொறியாளர்களின் ஒப்புதலுடன் தான் இப்பணி நடக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது.
எனவே, இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் குழாயை ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.