/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாய்க்கு ஒரு மரக்கன்று' ராணுவ பள்ளியில் திட்டம்
/
'தாய்க்கு ஒரு மரக்கன்று' ராணுவ பள்ளியில் திட்டம்
ADDED : ஆக 11, 2024 06:34 AM

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரில், சைனிக் பள்ளி என்ற ராணுவ பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு பசுமையான சூழலை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையில், 'தாய்க்கு ஒரு மரக்கன்று' திட்டம் துவங்கப்பட்டது.
அமராவதி ராணுவ பள்ளி, 'வெற்றி' அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை, பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன், லட்சுமி மணிகண்டன் ஆகியோர் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் கீழ், பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட, மண்ணின் மரபு சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மாணவ - மாணவியரும், தாங்கள் நடவு செய்த மரக்கன்றுகளுக்கு, தங்கள் தாயின் பெயரிட்டு, அதைப் பாதுகாப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

