/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளமாக மாறிய சிறிய குழி ; விபத்துக்கு அச்சாரம்
/
பள்ளமாக மாறிய சிறிய குழி ; விபத்துக்கு அச்சாரம்
ADDED : மே 01, 2024 11:33 PM

பல்லடம் : கொசவம்பாளையம்- - வடுகபாளையம் செல்லும் இணைப்பு சாலை, பொள்ளாச்சி ரோட்டுடன், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது. பொள்ளாச்சி ரோட்டில், பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி வருகின்றன.
இதில், கொசவம்பாளையம் ரோடும் மாற்று வழித்தடமாக பயன்பட்டு வருகிறது. வடுகபாளையத்தில் இருந்து கொசவம்பாளையம் செல்லும் ரோட்டில், சில மாதங்களுக்கு முன், சிறிய அளவிலான குழி ஒன்று ஏற்பட்டது. இந்த குழி நாளுக்கு நாள் விரிவடைந்து பள்ளமாக மாறி உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மண்ணை கொட்டி குழியை மூட முன்றனர். இந்த முயற்சி சில நாட்கள் மட்டுமே கைகொடுத்த நிலையில், வாகனங்கள் செல்லச்செல்ல மண் அரிக்கப்பட்டு மீண்டும் பள்ளம் பெரிதாகி வருகிறது.
நகராட்சியும் கண்டுகொள்ளாததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் தடுமாறிச் செல்லும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் முன், பள்ளத்தை மூடி ரோட்டை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

