/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் டிரான்ஸ்பார்மர்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் டிரான்ஸ்பார்மர்
ADDED : ஆக 13, 2024 12:31 AM
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்றகூட்மைப்பு நிர்வாகிகள் அளித்த மனு:
திருப்பூர் நகரம் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில், பல்வேறு விதிமுறை மீறல் நடந்து வருகிறது. எவ்வித கட்டணமும் செலுத்தாமல், 30க்கும் அதிகமான மின் இணைப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏ.பி.டி., ரோடு அருகே உள்ள பகுதியில், மாநகராட்சி ரோட்டை ஆக்கிரமித்து, உயரழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. போதிய இடைவெளி இல்லாமல், ரோட்டை ஆக்கிரமித்து டிரான்ஸ்பார்மர் அமைப்பதை தடுக்க வேண்டும். மின் கம்பிகளுக்கு போதிய இடைவெளி இல்லாமல், இரும்பு ெஷட் அமைக்கப்படுகிறது. இதனை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

