/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மரத்து' போனவர்களால் 'மரிக்கும்' மரம்!
/
'மரத்து' போனவர்களால் 'மரிக்கும்' மரம்!
ADDED : மார் 06, 2025 06:29 AM

பல்லடம்; பல்லடம் நகராட்சி, வடுகபாளையம் பகுதியில், தொடர்ச்சியாக சில மரங்களில், தனியார் விளம்பர பலகைகள் ஆணி அடித்து வைக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, ஆணி அடிக்கப்பட்டு மரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டார்.
அவர் கூறுகையில், 'ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துக்காக, இவ்வாறு மரங்களில் ஆணி அடித்து, விளம்பர பலகைகளை வைப்பது நியாயமா? இதனால், பசுமையான மரங்கள், ஒரு சில ஆண்டுகளில் காய்ந்து விடக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் நிறுவனத்தின் அனுமதியுடன் தான் இது நடக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது தொடர்பாக, ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். எனவே, சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்,' என்றார்.