/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: விவசாயிகளிடம் மலர்ந்த மகிழ்ச்சி
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: விவசாயிகளிடம் மலர்ந்த மகிழ்ச்சி
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: விவசாயிகளிடம் மலர்ந்த மகிழ்ச்சி
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: விவசாயிகளிடம் மலர்ந்த மகிழ்ச்சி
UPDATED : ஆக 18, 2024 02:42 AM
ADDED : ஆக 18, 2024 12:21 AM

அவிநாசி:அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அத்திக்கடவு - அவிநாசி போராட்டக் குழு கூட்டமைப்பு சார்பில், தாமரைக்குளக்கரையில் நன்றி அறிவிப்பு மற்றும் சிதறு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் வாயிலாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம் - குட்டைகளில் நீர் நிரப்ப உதவும் திட்டம், 1916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக, துவக்கி வைத்தார். இதைக் கொண்டாடும் வகையில், 2016ல், போராட்டம் துவங்கிய இடமான, மங்கலம் ரோட்டில் உள்ள தாமரை குளக்கரையில், அனைவருக்கும் நன்றி கூறியும், திட்டம் நிறைவேறியதற்கும் சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.
திட்டம் நிறைவேற சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த போராட்டக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பேசிய பலரும், 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட மற்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ள, 1,400 குளம், குட்டைகளையும், இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.
திட்டம் நிறைவேற்றப்பட்டதை பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் வரவேற்றுள்ளனர்.