/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கூடுதல் 20 சதவீத அட்மிஷனுக்கு கூடுதல் பணியாளர் கேட்கக் கூடாது'
/
'கூடுதல் 20 சதவீத அட்மிஷனுக்கு கூடுதல் பணியாளர் கேட்கக் கூடாது'
'கூடுதல் 20 சதவீத அட்மிஷனுக்கு கூடுதல் பணியாளர் கேட்கக் கூடாது'
'கூடுதல் 20 சதவீத அட்மிஷனுக்கு கூடுதல் பணியாளர் கேட்கக் கூடாது'
ADDED : ஜூலை 06, 2024 01:08 AM
திருப்பூர்;'அரசு கல்லுாரிகளில் நிரப்பாமல் மீதமுள்ள பாடப்பிரிவுக்கு கூடுதலாக, 20 சதவீத அட்மிஷன் ஒப்புதல் அளித்துள்ள உயர்கல்வித்துறை, கூடுதல் அட்மிஷனுக்கு, கூடுதலாக பணியாளரை சேர்த்துக் கொள்ள அனுமதியில்லை,' என, அறிவித்துள்ளது.
கலை அறிவியல் கல்லுாரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ள கல்லுாரி கல்வி இயக்ககம், 'தேவையுள்ள பாடப்பிரிவு களுக்கு, 20 சதவீதம் கூடுதலாகவும், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு, 15 சதவீதம், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு பத்து சதவீதமும், சுயநிதி கல்லுாரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், பத்து சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் தேவையுள்ள பாடப்பிரிவுகளுக்கு மேற்குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம். அதே நேரம், பல்கலை கழகம் ஒப்புதல் அளித்த மாணவர் சேர்க்கை இடங்கள் அடிப்படையிலேயே இடங்கள் நிரம்பியிருக்க வேண்டும்.
கூடுதல் மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி, கூடுதல் பணியிடங்களை கோர அனுமதியில்லை. மேற்கண்ட கூடுதல் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு பல்கலை ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.