ADDED : ஏப் 27, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:வாணவராயர் வேளாண் கல்லுாரி நான்காமாண்டு மாணவர்கள் 10 பேர், தாராபுரம் பகுதியில் கிராம தங்கல் திட்டத்தில் முகாமிட்டு விவசாயிகளைச் சந்தித்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
வீராட்சிமங்கலம் கிராமத்தில் 'பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு' செய்துள்ளனர். கிராம வரைபடத்தை வரைந்து ஊர் மக்களிடம் விளக்கினர். பயிர் உற்பத்தி சதவீதம், பயிர்க்கால அட்டவணை உள்ளிட்டவை வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

