/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு
ADDED : மார் 24, 2024 12:46 AM

திருப்பூர், : இருப்பு வைக்கப்பட்டிருந்த, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள, சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்து, அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் 'விவி பேட்' கருவிகள், தேர்தல் கமிஷன் 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டது. முதல் கட்ட சரிபார்ப்புக்கு பிறகு, போலீஸ் பாதுகாப்பில் இருந்தது.
லோக்சபா தேர்தலுக்காக, மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 'ஸ்ட்ராங் ரூம்'களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், சட்டசபை தொகுதி வாரியாக நேற்று பிரிக்கப்பட்டன.
மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூம்' திறக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய எட்டு தொகுதிகளுக்கு ஒதுக்கிய இயந்திரங்கள், எட்டு பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், ஆன்லைனில் சரிபார்த்து, மெஷின்களை பெட்டியில் வைத்தனர். பணிகள் முடிந்ததும், 'கன்டெய்னர்' வாகனங்களில், அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. சில தொகுதிகளுக்கு, இன்று காலை இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 10 சதவீதம் கூடுதல் இருப்புடன், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் இறுதி பட்டியல் தயாரானதும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், இயந்திரங்கள் சரிபார்க்கப்படும். மாதிரி ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடத்தி, ஒவ்வொரு 'பேலட்' யூனிட்டும் தயார்படுத்தி, 'பேல்ட் ஷீட்' பொருத்தப்படும்.
புதிய பேட்டரிகள் பொருத்தி, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்தி வைக்கப்படும். வரும், 18ம் தேதி காலை முதல், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டச்சாவடி அலுவலர்களால் எடுத்துச்செல்லப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 2,520 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
கன்ட்ரோல் யூனிட் -3,044, ஓட்டுப்பதிவு இயந்திரம் - 3,044, 'விவி பேட் - 2,298 ஒதுக்கப்பட்டுள்ளன

