/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராஜவாய்க்காலுக்கு கான்கிரீட் தளம் ஆண்டிபாளையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ராஜவாய்க்காலுக்கு கான்கிரீட் தளம் ஆண்டிபாளையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ராஜவாய்க்காலுக்கு கான்கிரீட் தளம் ஆண்டிபாளையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ராஜவாய்க்காலுக்கு கான்கிரீட் தளம் ஆண்டிபாளையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2024 12:20 AM
திருப்பூர்;ஆண்டிபாளையம் குளத்துக்கு வரும் ராஜவாய்க்காலுக்கு, கான்கிரீட் தளம் அமைக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர், ஆண்டிபாளையம் குளத்துக்கு, நொய்யல் நல்லம்மன் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வருகிறது. அத்துடன், மங்கலம் அருகே உள்ள ஒட்டணையில் இருந்தும், மற்றொரு வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.
குறிப்பாக, நல்லம்மன் தடுப்பணையில் இருந்து வரும் ராஜவாய்க்காலில், மங்கலம் மற்றும் சுல்தான்பேட்டை வடக்கு பகுதியில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. மங்கலம், அவிநாசி ரோடு அருகே, ராஜவாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியுள்ளது.
அணைக்கட்டுகளில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கிடைத்தாலும், வாய்க்கால்கள் அடிக்கடி புதர்மண்டி போகிறது; ஒவ்வொரு ஆண்டும் துார்வாரி சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. நல்லம்மன் தடுப்பணை வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்காலாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.
விவசாயிகள் கூறியதாவது:
மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து வடக்கே செல்லும் சாக்கடை கால்வாய், நேரடியாக ராஜ வாய்க்காலில் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால், தண்ணீர் மாசுபடுகிறது. சுல்தான்பேட்டை பகுதியிலும் கழிவுநீர் கலக்கிறது. எனவே, ராஜவாய்க்காலை, கான்கிரீட் கால்வாயாக மாற்ற வேண்டும்.
அவ்வாறு செய்தால், குளத்துக்கு விரைவாக தண்ணீர் கிடைப்பதுடன், கழிவுநீர் கலப்பதும் தடுக்கப்படும். மங்கலம் - அவிநாசி ரோடு பகுதியில் கான்கிரீட் கால்வாய் அமைத்தால், குழாய் மூலம், சாக்கடை கழிவு கலக்காமல் அப்புறப்படுத்திவிட முடியும். சுற்றுலாத்துறை சார்பில், ஆண்டிபாளையம் குளம் பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம், உரிய ஆய்வுகளை நடத்தி, குளத்துக்கு வரும் ராஜவாய்க்காலை கான்கிரீட் கால்வாயை மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒட்டணையில் இருந்து வரும் கால்வாயையும், பலப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

