/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஞ்சிலுவை சங்க முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
/
செஞ்சிலுவை சங்க முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
செஞ்சிலுவை சங்க முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
செஞ்சிலுவை சங்க முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 15, 2025 06:57 AM

உடுமலை; உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க பாராட்டு விழா நடந்தது.
தமிழக இந்திய செஞ்சிலுவை சங்கம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து மண்டல அளவிலான புத்தொளி பயிற்சியை, ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தியது.
பயிற்சி முகாம் மூன்று நாட்கள் நடந்தது. இதில் உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர் லட்சுமணன் மற்றும் இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியருக்கு பாராட்டு தெரிவித்து கல்லுாரி முதல்வர் கல்யாணி பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் வாசுதேவன் அவர்களை பாராட்டினார்.