/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவிர்க்கலாம் உமா கட்சிக்கொடி கட்டிய காரில் விதிமீறல்
/
தவிர்க்கலாம் உமா கட்சிக்கொடி கட்டிய காரில் விதிமீறல்
தவிர்க்கலாம் உமா கட்சிக்கொடி கட்டிய காரில் விதிமீறல்
தவிர்க்கலாம் உமா கட்சிக்கொடி கட்டிய காரில் விதிமீறல்
ADDED : ஆக 12, 2024 11:26 PM

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மோட்டார் வாகன விதிகள் மீறப்பட்ட காரில் ஊராட்சி தலைவர் வலம் வந்தார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
குண்டடம் ஒன்றியம், சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், மனு அளிக்க வந்தார். அவர் வந்த காரில், மோட்டார் வாகன விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருந்தன.
காரின் முன்பக்கம் கூடுதலாக பம்பர், நான்கு ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தன. முன்பக்க நம்பர் பிளேட் தெரியாதவகையில், ஹாரன்களால் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது. காரின் பதிவு எண் 'டிஎன்.83.டி.8055' பின்பக்க நம்பர் பிளேட்டில், கருப்பு, வெள்ளை, சிவப்பு என அ.தி.மு.க., கட்சிக் கொடி நிறத்தில் 'டி' என்கிற ஆங்கில எழுத்து இருந்தது. 8055 என்ற எண், ஆங்கிலத்தில் 'BOSS' என்கிற தோற்றத்தில் தெரியும்வகையில் இருந்தது.
கட்சிக் கொடியை காரில் கட்டிக்கொண்டால் போதும், போக்குவரத்து விதிகளை தாராளமாக மீறலாம்; நம்மை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற போக்கு கடைபிடிக்கப்படுகிறது. 'நமக்கேன் வம்பு' என, போலீசாரும் இதை கண்டுகொள்வது இல்லை.

