/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமுறை மீறும் பஸ்கள் 'பேரிகார்ட்' அமைப்பு
/
விதிமுறை மீறும் பஸ்கள் 'பேரிகார்ட்' அமைப்பு
ADDED : ஜூலை 07, 2024 12:31 AM

திருப்பூர்:திருப்பூர், காமராஜர் ரோட்டில் வரும் வாகனங்கள், தாராபுரம் ரோடு, ரவுண்டானா சுற்றி, மத்திய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும் என போக்குவரத்து போலீசார் விதிமுறை வகுத்துள்ளனர். ஆனால், மினிபஸ், தனியார் பஸ் சில நேரங்களில் அரசு பஸ், கனரக வாகனங்கள் கூட முழுமையாக ரவுண்டானா சுற்றி வராமல், காமராஜர் ரோட்டில் இருந்து உயர்மட்ட பாலத்தின் கீழ் புகுந்து, ஒரு வழிப்பாதையில் முன்னேறி சென்று, பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலை அடைந்தன.
போக்குவரத்து விதிமீறும் வாகனங்களால், விபத்து அபாயம் உள்ளதாக, பலமுறை எச்சரித்தும் கனரக வாகன ஓட்டிகள் மாறவில்லை. இதனால், தெற்கு போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் சாலையை கடந்து முன்னேறி செல்லாத வகையில் பேரிகார்டு வைத்து நேற்று தடுப்பு ஏற்படுத்தினர். இனி, டிரைவர்கள் விதிமீறினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.