/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடைப்பந்து போட்டி அரசுப் பள்ளிகள் 0
/
கூடைப்பந்து போட்டி அரசுப் பள்ளிகள் 0
ADDED : ஆக 23, 2024 10:40 PM
திருப்பூர்;சமீபத்தில் திருப்பூரில் நடந்த தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டியில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவிலும் மெட்ரிக் பள்ளி அணிகள் மட்டுமே பங்கேற்றன. இருபது அணிகள் பதிவில், ஒரு அரசு பள்ளி கூட இல்லை.விளையாட்டு ஆசிரியர்கள் கூறியதாவது:
தனிநபர் போட்டிகளை விட, குழு போட்டிகளுக்கு வீரர்களை ஒரு சேர தேர்வு செய்வது சவாலானது; ஷூ, சாக்ஸ் அணிந்து, கச்சிதமான உடற்பயிற்சி, 'வார்ம் அப்' பயிற்சியுடன் அணியைத் தயார்படுத்துவது சற்று கடினம். காரணம், நம் பள்ளி மைதானங்கள் நிலை அப்படி.கூடைப்பந்து மைதானத்தின் தரைத்தளம் தரமாக இருக்க வேண்டும். பெயரளவுக்கோ, மண் தரையில் கூடைப்பந்து விளையாட முடியாது. பந்து மேலே எழாது. ஒரு சிறந்த வீரர், அருமையான மைதானத்தை பார்த்தவுடன் ஆர்வமாக விளையாட களமிறங்கி வருவார். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கூடைப்பந்து மைதானம் என்பது கானல் நீராக உள்ளது. ஆர்வம் இருந்தும், விளையாட வழியில்லாத நிலை உள்ளது. இதனால், அணிகளும் முழுமையாக உருவாவதில்லை. திறமை காட்ட விரும்புவோர் பள்ளி அல்லது வேறு அணிகளில், கிளப் அணிகளில் சேர்ந்து விளையாடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

