/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 20, 2024 10:37 PM
அவிநாசி;அவிநாசி சட்டமன்ற தொகுதியின் சார்பில், சேவூர் கைகாட்டி - ரவுண்டானாவில், பா.ஜ., பொதுக்கூட்டம், 25ம் தேதி நடைபெறுகிறது.
பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அவிநாசி அருகே கருவலுார் ரத்தினமூர்த்தி மஹாலில் மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ நந்தகுமார், சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் சண்முகசுந்தரம், நந்தினி, மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், வரும், 25ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பொது செயலாளர் ராம சீனிவாசன் சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கலந்து கொள்ள செய்வது எனவும், 2026ம் தேர்தலை மையமாக வைத்து கூட்டம் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், அவிநாசி, அன்னுார் மண்டல தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அவிநாசி மேற்கு மண்டல தலைவர் கருணாநிதி நன்றி கூறினார்.

