/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ள அளவை கண்டறிய 'ப்ளட் கேஜ்' நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
வெள்ள அளவை கண்டறிய 'ப்ளட் கேஜ்' நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வெள்ள அளவை கண்டறிய 'ப்ளட் கேஜ்' நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வெள்ள அளவை கண்டறிய 'ப்ளட் கேஜ்' நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : ஆக 29, 2024 12:17 AM

உடுமலை: பருவமழை காலத்தில் தரை மட்ட பாலங்களில், வெள்ள நீர் அளவை வாகன ஓட்டுநர்கள் கண்டறியும் வகையில், 'ப்ளட் கேஜ்' (வெள்ள நீர்மட்ட அளவுகோல்) கட்டமைப்பை புதுப்பிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை நெடுஞ் சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, பாலங்கள், சிறு பாலங்களில், வடிகால் துார்வாரப்பட்டு, தடுப்பு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பொள்ளாச்சி - தாரா புரம் மாநில நெடுஞ் சாலையில், சுங்கார முடக்கு உள்ளிட்ட இடங்களில், ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலங்கள் அமைந்துள்ளன. வட கிழக்கு பருவமழை காலத்தில், மழை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும்.
சில நேரங்களில், தரைமட்ட பாலங்கள் மீதும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, வாகன ஓட்டுநர்கள், வெள்ளத்தின் அளவை தெரிந்து கொண்டு, பாலத்தை கடந்து செல்ல, 'ப்ளட் கேஜ்' பாலத்தின் அருகில் அமைக்கப்படும்.
இத்தகைய கட்டமைப்புகள் போதிய பராமரிப்பின்றி இருந்தது. வட கிழக்கு பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், 'ப்ளட் கேஜ்' அமைப்பை புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துறையினர் கூறியதாவது: உடுமலை உட்கோட்டத்துக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில், மையக்கோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தரைமட்ட பாலங்களில் உள்ள 'ப்ளட் கேஜ்' புதுப்பிக்கப்பட்டு, அளவீடுகள் குறிக்கப்பட்டுள்ளது.
இதர ரோடுகளிலும் இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பருவமழை துவங்கும் முன் பணிகளை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

