/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுவட்ட பூப்பந்து போட்டி 'விவேகானந்தா' அசத்தல்
/
குறுவட்ட பூப்பந்து போட்டி 'விவேகானந்தா' அசத்தல்
ADDED : ஆக 25, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. 14 வயதுக்குட்பட்டோர் பூப்பந்து போட்டியில் முத்துார் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றது. 14 வயது மாணவியர்; 17 வயது மாணவர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றது.
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளித்தாளாளர் சண்முகம், செயலாளர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், பள்ளி முதல்வர் நடராஜ், தலைமையாசிரியை பத்மப்ரியா ஆகியோர் வாழ்த்தினர்.

