/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டு முழுவதும் செண்டுமல்லி அசத்தும் விவசாயிகள்
/
ஆண்டு முழுவதும் செண்டுமல்லி அசத்தும் விவசாயிகள்
ADDED : ஆக 31, 2024 01:56 AM
உடுமலை;நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, ஆண்டு முழுவதும், செண்டுமல்லி சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை புங்கமுத்துார், பாலாறுதுறை, பாப்பானுத்து உட்பட பகுதிகளில், ஆயுதபூஜை சீசனை இலக்காக வைத்து, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உட்பட சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்த பரப்பில், கிணற்று பாசனத்தில் இவ்வகை சாகுபடியில், சிறு, குறு விவசாயிகள் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சீசனில் மட்டும், பூக்கள் சாகுபடியில், ஈடுபட்டு வந்த விவசாயிகள் தற்போது, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, ஆண்டு முழுவதும் இச்சாகுபடியில், ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, நிலப்போர்வை எனப்படும், 'மல்ஷீங் ஷீட்', அமைத்து, சொட்டு நீர் பாசன முறையில், செண்டுமல்லி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கூறியதாவது: முகூர்த்த சீசனில், செண்டு மல்லி, கிலோ, 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிற நாட்களில், போதிய விலை கிடைப்பதில்லை. குறைந்த தண்ணீர், பராமரிப்பு மட்டும் தேவைப்படுவதால், சாகுபடியை கைவிடாமல், தொடர்ந்து வருகிறோம்.
தோட்டக்கலைத்துறை வாயிலாக மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால், சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.