/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் சிறக்க வேண்டும் உழைப்பு சுமையல்ல... சுகம்
/
குழந்தைகள் சிறக்க வேண்டும் உழைப்பு சுமையல்ல... சுகம்
குழந்தைகள் சிறக்க வேண்டும் உழைப்பு சுமையல்ல... சுகம்
குழந்தைகள் சிறக்க வேண்டும் உழைப்பு சுமையல்ல... சுகம்
ADDED : செப் 16, 2024 12:16 AM

திருப்பூர், வஞ்சிபாளையம் சாலை, திருவள்ளுவர் நகரில் வசிப்பவர்கள் ஜெயகுமார் - மீரா தம்பதியர்;பனியன் நிறுவன டெய்லர்கள். மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள், முதல் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.
ஜெயகுமார் - மீரா நம்முடன் பகிர்ந்தவை:
வாடகை வீட்டில் வசிக்கிறோம். நாங்கள் கஷ்டப்பட்டாலும், குழந்தைகள் எதிர்காலத்தில் சிறப்பாக வர வேண்டும் என்று எண்ணுகிறோம். இதனால், உழைப்பைச் சுமையாக கருதாமல் சுகமாக மேற்கொள்கிறோம். நேரத்தை வீணடித்தால், சேமிப்பு ஒருதுளி கூட இருக்காது என்பதை உணர்ந்து, பணியில் கவனம் செலுத்துகிறோம்.
பணி முடித்துவந்ததும், குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். என்ன இன்று பாடம் நடத்தினார்கள்; நண்பர்களுடன் விளையாடினாயா என்றெல்லாம் கேட்போம்.
ஒற்றுமையாக நண்பர்களுடன் இருங்கள் என்ற கருத்தை அவர்களிடம் வலியுறுத்துகிறோம். அருகில், எங்கள் பெற்றோர் வசிப்பதால், குழந்தைகளை அடிக்கடி வந்து பார்த்துக்கொள்வர். இது எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.
சொந்த வீடு எங் கள் கனவு; அதை எங் கள் குழந்தைகள் நிறை வேற்றுவர்; முதிய வயதில் எங்களை நிச்சயம் நல்லபடியாக வைத்துக்கொள்வர் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை!