/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு ஆங்கில தேர்வும் 'ஈஸி'
/
10ம் வகுப்பு ஆங்கில தேர்வும் 'ஈஸி'
ADDED : மார் 29, 2024 12:57 AM

திருப்பூர்:'பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு நேற்று நடந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினா யோசித்து விடையெழுதும் வகையில் இருந்தது,' என, தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆங்கில தேர்வெழுத தகுதியானவர்கள், 30 ஆயிரத்து, 620 பேர்; இவர்களில், 379 பேர் தேர்வுக்கு வரவில்லை. 250 பேர் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு பெற்றிருந்தனர். தேர்வை, 29 ஆயிரத்து, 991 பேர் எழுதினர். 467 தனித்தேர்வர்களில், 40 பேர் தேர்வறைக்கு வரவில்லை. 18 பேர் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருந்தனர்; 409 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது:
மகாலட்சுமி: ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடிந்தது. ஒரு சில வினாக்கள் யோசிக்கும் வகையில் இருந்தாலும், வினாத்தாள் எளிமையாகத்தான் இருந்தது. 80 க்கும் மேல் மதிப்பெண் வாங்கிட முடியும்.
தயாநித்யா: பாடப்புத்தகத்துக்கு பின்புறம் இருந்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண்ணில், நான்கு வினாக்கள் யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தாலும், முழுமதிப்பெண் பெற முடியும். வினாத்தாள் எளிமையாக இருந்தது; 90 மதிப்பெண் பெற முடியும்.
அஸ்வத்தாமன்: ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும், ஐந்து மதிப்பெண் வினாவில் ஆசிரியர் குறிப்பெடுத்துக் கொடுத்த வினாக்களே வந்திருந்தது. 'போயம்' பாடங்களுக்கு பின்புறம் இருந்து வினா வந்திருந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததால், தேர்வெழுதுவதற்கான நேரமும் சரியாக இருந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்.
தருண்குமார்: இரண்டு மதிப்பெண் வினா சற்று யோசிக்க வைத்தது. மற்ற வினாக்கள் எளிமையாக இருந்தது. பாட புத்தகத்துக்கு பின்புறமிருந்த கேள்விகள் இடம் பெற்றிருந்தது. சினாநிமஸ், எரர் ஸ்பாட் பகுதியில் இதுவரை கேட்கப்படாத கேள்வி இடம் பெற்றிருந்தது. மற்ற வகையில் வினாத்தாள் ஈஸி தான். நல்ல மதிப்பெண் பெற முடியும்.

