ADDED : ஜூலை 12, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காந்தி நகர் ஏ.வி.பி., லே அவுட் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்; டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர்; ரேஷன் அரிசி ஒரு டன்னை கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், திருப்பூர், சிட்கோ, பொன்னாபுரத்தை சேர்ந்த ேஷக் மைதீன், 30 என்பதும், சுற்றுவட்டார பகுதியில் மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. வாலிபரை போலீசார் கைது செய்து, அரிசி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

