/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளிகளில் ஒரு 'சென்டம்' கூட இல்லை!
/
மாநகராட்சி பள்ளிகளில் ஒரு 'சென்டம்' கூட இல்லை!
ADDED : மே 06, 2024 11:11 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்ற போதும், மாநகராட்சி பகுதியில் ஒரு மேல்நிலைப்பள்ளி கூட முதலிடம் பெறாதது, மாநகர கல்வித்துறையினரை கலங்க வைத்துள்ளது.
திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 234 பேர் தேர்வெழுதினர். 13 பேர் தேர்ச்சி பெறவில்லை. 221 பேர் தேர்ச்சி பெற்று, 94.44 சதவீதம். குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 101 மாணவர், 81 மாணவியர் என, 182 பேர் தேர்வெழுதினர். 94 மாணவர், 79 மாணவியர் என, 173 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒன்பது பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 95.05.
திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 149 மாணவியர் தேர்வெழுதினர்; 147 பேர் தேர்ச்சி பெற்றனர். இரு மாணவியர் தேர்ச்சி பெறாததால், இப்பள்ளி, 98.66 சதவீத தேர்ச்சியை பெற்றது.
பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 576 மாணவியர் தேர்வெழுதினர். 563 பேர் தேர்ச்சி பெற்றனர்; 13 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 97.74. பத்மாவதிபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 35 மாணவர், 40 மாணவியர் என மொத்தம், 75 பேர் தேர்வெழுதினர். 33 மாணவர், 39 மாணவியர் என, 72 பேர் தேர்ச்சி பெற்றனர். மூன்று பேர் தேர்ச்சி பெறாததால், 96 சதவீதம்.
ஒரே பள்ளியில் 36 பேர் 'பெயில்'
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,148 மாணவியர் தேர்வெழுதினர். 55 மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. 1,096 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 95.47. திருப்பூர், சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 152 மாணவர் தேர்வெழுதினர். 116 பேர் தேர்ச்சி பெற்றனர்; 36 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 76.32 சதவீதம். மாநகராட்சி பள்ளிகளில் குறைந்தபட்ச தேர்ச்சியை பதிவு செய்துள்ள பள்ளியாக, இப்பள்ளி உள்ளது.
தாராபுரம் நகராட்சி பள்ளியை மாநகராட்சி பள்ளிகள் பட்டியலில் கல்வித்துறை சேர்த்துள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய, 61 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது, குறிப்பிடத்தக்கது.