/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு
/
பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு
பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு
பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு
ADDED : ஆக 17, 2024 12:33 AM
உடுமலை:மடத்துக்குளம் பேரூராட்சி, அமராவதி பிரதான கால்வாய் கரையில் மலைபோல் தேங்கியுள்ள குப்பை அகற்றப்படாததால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
உடுமலை அமராவதி அணை, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும் கால்வாயாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா என, 64 கி.மீ., துாரம் பயணிக்கும் கால்வாய் கரைகள், கிராமப்பகுதிகளில் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகளை, கிருஷ்ணாபுரம் அமராவதி பிரதான கால்வாய் கரையில் கொட்டப்படுகிறது. சுற்றிலும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில், மலைபோல் கழிவுகள் தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம், சுகாதாரக்கோடு ஏற்படுகிறது.
தற்போது, நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமராவதி பிரதான கால்வாய் கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்கிலிருந்து, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், பாசன நீரில் கலக்கும். இதனால், இரு தாலுகாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும், அதனை குடிக்கும் கால்நடைகளும் பாதித்து வருகின்றன.
எனவே, பாசன கால்வாய் கரையில் உள்ள குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.