/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எலாஸ்டிக் தொழிலுக்கான 'கிளஸ்டர்' அமைக்கணும்! 'டெமட்டா' சங்கம் தீர்மானம்
/
எலாஸ்டிக் தொழிலுக்கான 'கிளஸ்டர்' அமைக்கணும்! 'டெமட்டா' சங்கம் தீர்மானம்
எலாஸ்டிக் தொழிலுக்கான 'கிளஸ்டர்' அமைக்கணும்! 'டெமட்டா' சங்கம் தீர்மானம்
எலாஸ்டிக் தொழிலுக்கான 'கிளஸ்டர்' அமைக்கணும்! 'டெமட்டா' சங்கம் தீர்மானம்
ADDED : மார் 12, 2025 12:45 AM

திருப்பூர்; ''கிளஸ்டர்' எனப்படும் தற்சார்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க (டெமட்டா) கலந்தாய்வு கூட்டம், அவிநாசி ரோட்டிலுள்ள விஸ்வாஸ் ஓட்டலில் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
சங்க செயலாளர்சவுந்திரராஜன் வரவேற்றார். சட்ட மற்றும் நிதி ஆலோசகர் ஸ்ரீதரன், ஆடிட்டர் யுவராஜ், காப்பீட்டு நிறுவன பிரதிநிதி அருண்பீட்டர் ஆகியோர் பேசினர். நிறைவாக, பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
கூட்டம் குறித்து, கோவிந்தசாமி கூறியதாவது:
கூட்டத்தில், தீ விபத்து காப்பீடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. ஆடிட்டர், 2025-26 பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பேசினர். வருமானவரி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அறிவிப்புகளை விளக்கினர்.
நிறுவனங்கள் பின்தொடர வேண்டிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை; வரவு -செலவு கணக்கில் உள்ள வராக்கடன் குறித்த சட்ட நிலைப்பாடுகள் குறித்து பேசினர். தீ விபத்து காப்பீடு செய்தவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
எலாஸ்டிக் தொழிலின் முன்னேற்றத்துக்காக, 'கிளஸ்டர்' எனப்படும் தற்சார்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரப்பர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு, விலை உயர்வு குறித்து விவாதித்து, அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.