/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஏ.ஓ.,க்கள் தொடர் தர்ணா போராட்டம் :தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
/
வி.ஏ.ஓ.,க்கள் தொடர் தர்ணா போராட்டம் :தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
வி.ஏ.ஓ.,க்கள் தொடர் தர்ணா போராட்டம் :தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
வி.ஏ.ஓ.,க்கள் தொடர் தர்ணா போராட்டம் :தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 27, 2024 12:17 AM

உடுமலை;வி.ஏ.ஓ., தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உடுமலை தாலுகா அலுவலகத்தில் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது.
உடுமலை கணக்கம்பாளையம் வி.ஏ.ஓ., வாக பணியாற்றியவர் கருப்புசாமி. சில நாட்களுக்கு முன், கூளநாயக்கன்பட்டியிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கருப்புசாமி தனது தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைத்திருந்த வாக்குமூலம் கிடைத்தது.
அவரை தற்கொலைக்கு துாண்டிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உடுமலை தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் சீனிப்பாண்டி தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: வி.ஏ.ஓ., கருப்புசாமி தனது தற்கொலைக்கு காரணமான வாக்குமூலத்தில், தனது மரணத்துக்கு, கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மக்கள் மித்ரன் ஆசிரியர் மணியன் ஆகியோர் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசு அலுவலர்களை மிரட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அவர்களிடம் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், மாலை வரை போராட்டம் தொடர்ந்தது. வி.ஏ.ஓ., க்கள் போராட்டத்தால், உடுமை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

