/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கடலை - தேங்காய் எண்ணெய் ரேஷனில் வினியோகியுங்கள்'
/
'கடலை - தேங்காய் எண்ணெய் ரேஷனில் வினியோகியுங்கள்'
ADDED : ஆக 19, 2024 11:59 PM

பல்லடம்;கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்துகிறோம். பல லட்சம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், கருத்து கேட்பு நடத்துவதாக தமிழக அரசு அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. கருத்து கேட்பு என்ற பெயரில் தமிழக அரசு கண்காணிப்பு நாடகம் நடத்தி வருகிறது.
இன்று அனைத்து குடும்பங்களிலும் தேங்காய் எண்ணெய் அவசியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசே ரேஷன் கடை மூலம் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கும் போது, பொதுமக்கள் சந்தோஷத்துடன் அதை வாங்கி செல்வர். முதல் கட்டமாக மூன்று மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை தலா ஒரு லிட்டர் வீதம் ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வினியோகிக்க வேண்டும்.

