/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
ADDED : ஆக 19, 2024 01:21 AM
உடுமலை:குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியாண்டு தோறும் பல்வேறு நலத்திட்டப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது.
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகிக்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் மாரியப்பன் வரவேற்றார்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்து, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் ஷர்மிளா பானு முன்னிலைவகித்தார். மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பங்கேற்றனர். விழாவில், 135 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.