ADDED : மார் 21, 2024 11:40 AM

பல்லடம்;மாவட்ட அளவிலான கால்பந்து 'லீக்' போட்டிகள், திருப்பூர், பல்லடத்தில் நடந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்ட அளவிலான கால்பந்து 'லீக்' போட்டிகள், கடந்த பிப்., 11 அன்று திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உடுமலை கல்பனா விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில்  துவங்கி நடந்து வருகின்றன.
கால்பந்து கழக மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் அன்பு, பொருளாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அளவில், மொத்தம், 22 அணிகள் பங்கேற்கின்றன. இதில், 'ஏ' மற்றும் 'பி' என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு, 'ஏ' பிரிவில், 11 அணிகளும், 'பி' பிரிவில், 11 அணிகளும் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் தலா, 10 போட்டிகளில் பங்கேற்க வேண்டும். ஏப்., 4ம் தேதி வரை லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
இதனை தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடைபெறும் என, கால்பந்து கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

