/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட பேச்சு போட்டி அரசு பள்ளி முதலிடம்
/
மாவட்ட பேச்சு போட்டி அரசு பள்ளி முதலிடம்
ADDED : ஆக 13, 2024 01:43 AM

உடுமலை;தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, மாவட்ட நிர்வாக அலுவலக அரங்கில் நடந்தது. ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி இப்போட்டி நடந்தது.
இப்போட்டியில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அர்சின்சனா முதல் பரிசு பெற்றுள்ளார். மாணவிக்கு பரிசுத்தொகையாக ஐந்தாயிரம் ரூபாயும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா, முதுகலை உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ், உதவி தலைமையாசிரியர் மஞ்சுளா, பள்ளி இலக்கிய மன்ற செயலாளர் சின்னராசு, இயற்பியல் ஆசிரியர் ஞானபிரகாசம், தமிழாசிரியர்கள், தைலியண்ணன், ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

