/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு..க, கூட்டணி கட்சியினர் ஆலோசனை
/
தி.மு..க, கூட்டணி கட்சியினர் ஆலோசனை
ADDED : மார் 22, 2024 11:16 PM

அவிநாசி;தி.மு.க., கூட்டணிக்கட்சிகளின் நீலகிரி லோக்சபா தொகுதிக்கான அவிநாசி சட்டசபை தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலா ளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் வரவேற்றார். பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர் மூர்த்தி, நகராட்சி தலைவர் குமார், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜாவை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
தொகுதி பார்வையாளர் டாக்டர் கிருபாசங்கர், வடக்கு மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், நகர செயலாளர் வசந்த்குமார், முத்துசாமி (மா.கம்யூ.,), தங்கமுத்து, லட்சுமணசாமி (காங்.,), சுப்பிரமணியம் (ம.தி.மு.க.,), அபுசாலி (ம.ம.க.,), சண்முகம்(வி.சி.க.,) உட்பட பலர் பங்கேற்றனர்.

